தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

களப்பணியாளர்கள் மின் விபத்துகளை தவிர்க்க வேண்டும் - தமிழ்நாடு மின்சார வாரியம்

உரிய பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து களப்பணியாளர்கள் மின் விபத்துகளை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

v
தமிழ்நாடு மின்சார வாvரியம்

By

Published : Jul 18, 2021, 11:09 PM IST

சென்னை: மின்வாரிய கள பணியாளர்கள் கடந்த சில நாட்களாக அதிக மின் விபத்துக்களில் சிக்கி வருகின்றனர். இதனை தவிர்க்கும் பொருட்டு மின்சார வாரியம் வெலியிட்டுள்ள அறிக்கையில், “மின்வாரிய கள பணியாளர்கள், தமிழ்நாடு மின் பகிர்வு நிறுவனம் சாரா மின் நுகர்வோர்கள் ஆகியோர் உரிய பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்காததால் மின் விபத்து ஏற்படுகிறது.

இதனால் உயிரிழப்பு முதல் தீவிர உடல் பாதிப்புவரை நிகழ்கிறது. இனி வரும் காலங்களில் மிக கவனத்துடன் பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தி, மின் விபத்துக்கள் நிகழாதபடி கள பணியாளர்கள் பணியாற்ற வேண்டும். மேலும் மின் வாரியத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில், வாரிய பணி மேலும் சிறப்பாக நடைபெற உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும்.

பொது மக்கள் மின் உபகரணங்கள், மின்சார பயன்பாட்டை பாதுகாப்பாக கையாள்வது குறித்த கையேடுகள், நாடக அளவில் விளம்பரம், பொது இடங்களில் பாதுகாப்பு விளம்பர அறிக்கைகள் மூலம் தலைமை பொறியாளர், மேற்பார்வை பொறியாளர் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஒகேனக்கலில் தடையை மீறி ஆயில் மசாஜ், போதைக் குளியல்: கண்டுகொள்ளுமா காவல் துறை?

ABOUT THE AUTHOR

...view details