தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; சவுக்கு சங்கர் தண்டனை நிறுத்தி வைப்பு.. - சுவாமிநாதன்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விதித்த தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்

By

Published : Nov 11, 2022, 12:51 PM IST

யூடியூப் நேர்காணலில் ”உயர்நீதித்துறை முழுவதும் ஊழலில் மூழ்கியுள்ளது" என்று ஷங்கர் கூறியது தொடர்பான வழக்கில் செப்டம்பர் 15 அன்று, சென்னை உயர்நீதிமன்றத்தின் (மதுரை பெஞ்ச்) நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், கிரிமினல் நீதிமன்ற அவமதிப்புக்காக சவுக்கு ஷங்கர் குற்றவாளி என தீர்ப்பளித்தது. தண்டனையை நிறுத்தி வைக்க டிவிஷன் பெஞ்ச் மறுத்ததை தொடர்ந்து அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.

ஷங்கரின் யூடியூப் நேர்காணலை கருத்தில் கொண்டு நீதிபதி சுவாமிநாதன் தலைமையிலான உயர் நீதிமன்ற அமர்வு இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடங்கியது.

அதற்கு முன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக அவர் ட்வீட் செய்ததற்காக அவர் மீது தானாக முன்வந்து மற்றொரு அவமதிப்பு வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பெஞ்ச் தொடர்ந்தது.

இந்த வழக்கில் சவுக்கு சங்கர் உயர் நீதிமன்றத்தில் தானே வாதாடினார். அதில், "நான் எனது அறிக்கையை மறுக்கவில்லை, ஆனால் நேர்காணல் மற்றும் கட்டுரைகள் ஒட்டுமொத்தமாக எடுக்கப்பட்டவை. நீதித்துறையின் மீது எனக்கு மரியாதை உள்ளது. ஆனால் ஊழல் கூறுகளை அகற்றுவதன் மூலம் அதன் முன்னேற்றத்தை விரும்புகிறேன்" என கூறினார்.

மேலும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜூஸ் குரியன் ஜோசப், மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தற்போதைய சட்ட அமைச்சர் ஆகியோரும் நீதித்துறையில் கூறினார்.

ஆனால் அவரது அறிக்கைகள் நீதிமன்றத்தின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் இருப்பதாகக் கருதிய நீதிமன்றம், அவரைக் குற்றவாளி என தீர்ப்பளித்தது.

குற்றஞ்சாட்டப்பட்ட அறிக்கைகளைப் படித்தால், அவை நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் கௌரவத்தையும் கண்ணியத்தையும் குறைக்கும் என்ற முடிவுக்கு எவரையும் இட்டுச் செல்லும். எனவே அவர் கிரிமினல் அவமதிப்பு குற்றவாளி என்று நாங்கள் கருதுகிறோம்," என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது.

உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அக்டோபர் 11ம் தேதி சவுக்கு சங்கர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட காலம் நிலுவையில் இருந்த மனு, இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு, மனு மீது விசாரணை நடத்தியது.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை விதித்த 6 மாத சிறைத்தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. மேலும் அடுத்த விசாரணை வரை, நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து ஷங்கர் எந்த வீடியோக்களையும் கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என்றும் பெஞ்ச் உத்தரவிட்டது.

இதையும் படிங்க:தென் இந்தியாவின் முதல் வந்தேபாரத் ரயில் சேவை; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

ABOUT THE AUTHOR

...view details