கரோனா பெருந்தொற்றுநோய்க் காலத்தின்போது சென்னையில் பக்கவாத நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனை, 20 வயது முதல் 80 வயதுக்குள்பட்ட 250-க்கும் மேற்பட்ட பக்கவாத நோயாளிகளுக்குச் சிறந்த சிகிச்சை வழங்கி மறு வாழ்வு அளித்துள்ளது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தினால் கூடுதல் மன அழுத்தம் ஏற்பட்டு, இளைஞர்களிடையே அதிகளவில் பக்கவாதம் ஏற்பட்டதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. கரோனா காலத்தில் மாதத்திற்கு சராசரியாக சுமார் 25 நோயாளிகள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஒஎம்ஆரில் உள்ள அப்போலோ சிறப்பு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 40 விழுக்காட்டினர் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்.
பொதுவாக பக்கவாதம் என குறிப்பிடப்படும் ஒரு உறைவு அல்லது த்ரோம்பஸ் காரணமாக மூளையின் ஒரு பகுதிக்கு ரத்தம் பாய்வதை நிற்கும்போது பெரும்பான்மையான பக்கவாதம் ஏற்படுகிறது. ரத்த ஓட்டத்தில் ஏற்படும் இந்த குறுக்கீடு, சுற்றியுள்ள மூளை செல்கள் சேதம் அடைவதற்கு வழிவகுக்கிறது.
24 வயது பெண் சென்னை ஓஎம்ஆரில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு மயக்க நிலையில் கொண்டு வரப்பட்டார். அவருக்கு இருதரப்பு முதுகெலும்பு தமனி சிதைவு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். முதுகெலும்பு தமனி பிளவுபடுத்தலுக்காக மெக்கானிக்கல் த்ரோம்பெக்டோமி செய்யப்பட்டிருப்பது நம் நாட்டில் இதுவே முதல் முறையாகும்.