தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடத்த முயன்ற பொன்னியின் செல்வனின் மகன் காலத்து சிலைகள்... காவல்துறை பறிமுதல்...!

’பொன்னியின் செல்வன்’ ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் காலத்து தொன்மையான ஏழு சிலைகளை சென்னையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

By

Published : Oct 1, 2022, 9:54 AM IST

Updated : Oct 1, 2022, 10:06 AM IST

கடத்த முயன்ற பொன்னியின் செல்வனின் மகன் காலத்து சிலைகள் காவல்துறையினரால் பறிமுதல்...!
கடத்த முயன்ற பொன்னியின் செல்வனின் மகன் காலத்து சிலைகள் காவல்துறையினரால் பறிமுதல்...!

சென்னை:பொன்னியின் செல்வன் என்று அழைக்கப்படும் அருண்மொழிவர்மன் என்ற இயற்பெயர் கொண்ட முதலாம் ராஜராஜ சோழன் ஆட்சிக்காலம் என்பது சோழ மரபினரின் பொற்காலம் என்று அழைக்கப்படும். அவரது மகன் ராஜேந்திர சோழன் காலத்து ஏழு தொன்மையான சிலைகளை சென்னையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தொன்மையான இரண்டு தஞ்சை ஓவியங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். சுங்கத்துறை அலுவலர்கள் கொடுத்த ரகசிய தகவலின்படி ராஜா அண்ணாமலைபுரத்தில் அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் வீட்டில் இந்த சிலைகள் மற்றும் ஓவியங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

சிலைகள் வைத்திருந்த உரிமையாளர்களிடம் சிலைகள் தொடர்பான ஆவணங்களைக் கேட்டபோது, உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பதாக காவல்துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் கால அவகாசம் கொடுக்கப்பட்டும் ஆவணங்கள் தராததால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்கள் வழக்கு பதிவு செய்து சிலைகள் மற்றும் ஓவியங்களை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், 2011 ஆம் ஆண்டு தனது தந்தை இறந்த பிறகு இந்த சிலைகள் வீட்டில் வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவிற்கு இந்த சிலைகளை எடுத்துச் செல்ல முயன்ற போது உரிய ஆவணங்கள் தந்தை வைத்திருக்காததால் எடுத்துச் செல்ல முடியவில்லை என விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இந்த சிலைகள் மற்றும் ஓவியங்களை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் இந்த சிலைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சமர்ப்பிக்க உள்ளதாகவும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்கள்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க வாழ் இந்தியரை தமிழகம் வரவழைத்து இது தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாகவும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். கிருஷ்ணா ,பார்வதி ,அமர்ந்த நிலையில் பார்வதி, புத்தர் சிலை, தேவி சிலை,தாரா சிலை,மற்றொரு புத்தா சிலை மற்றும் பாலகிருஷ்ணா, கிருஷ்ணா யாசாலா ஓவியங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வீட்டில் தண்ணீர் வராததால் ஆத்திரம்...மண்வெட்டியால் மனைவி, மகளை கொலை செய்தவர் கைது

Last Updated : Oct 1, 2022, 10:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details