சென்னை:சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மே 7ஆம் தேதியன்று முதன்முறையாக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சியமைத்தது.
கரோனா தடுப்பு நடவடிக்கையில் தொடங்கி காகிதமில்லா வரவு-செலவுத் திட்ட அறிக்கை (இ-பட்ஜெட்) என்ற புதிய பாய்ச்சலை நிகழ்த்தியது வரை திமுக அரசு தனது நூறு நாள்களை நிறைவுசெய்கிறது. மேலும், இன்று மேலும் ஒரு மைல்கல்லாக வேளாண்மைக்கென தனி வரவு-செலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல்செய்கிறது.
இந்த நூறு நாள்களில் ஸ்டாலின் தலைமையிலான அரசு நிறைவேற்றிய மக்கள் நலத் திட்டங்கள்:
- கரோனா கால நிவாரண நிதியாக அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.4000,
- மகளிருக்கு அரசு நகரப் பேருந்தில் இலவசப் பயணச் சலுகை,
- பால் விலைக் குறைப்பு,
- உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது துரித நடவடிக்கை,
- தேசிய வேலை உறுதித் திட்டத்தில் நூறு நாள் பணியை 150 நாள்களாக உயர்த்தி அறிவிப்பு,
- 32 ஆயிரத்து 283 நபர்களுக்குப் பட்டா,
- 30 ஆயிரத்து 455 பேருக்கு உதவித்தொகை,
- மக்களை தேடி மருத்துவம்,
- காகிதமில்லா வரவு-செலவுத் திட்ட அறிக்கை,
- வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை (ஆகஸ்ட் 14)
இதையும் படிங்க: தமிழக பட்ஜெட் 2021