தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அதிமுகவில் சபாநாயகரை பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர்'

சென்னை: தேர்தலில் அதிமுகவிற்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்பதை அறிந்து சபாநாயகரை அக்கட்சியினர் பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர் என்றும், இதை திமுக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது எனவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்தார்.

By

Published : May 2, 2019, 10:11 PM IST

Updated : May 3, 2019, 11:25 AM IST

ஆர். எஸ் பாரதி

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "அதிமுகவைச் சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி அவர்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இதைத்தொடர்ந்து, திமுக தலைவர் ஸ்டாலின் சார்பாக ஏப்ரல் 30ஆம் தேதி சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வர நானும், வழக்கறிஞரும், சட்டப்பேரவை உறுப்பினருமான மு.க செல்வமும் இணைந்து நோட்டீஸ் கொடுத்தோம்.

திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ் பாரதி பேட்டி
இது ஜனநாயகத்தை காப்பாற்ற திமுக எடுத்த முடிவாகும். மேலும் தேர்தல் முடிவில் அதிமுகவிற்கு ஒரு இடம் கிடைக்காது என்பதை அறிந்து அக்கட்சியினர் சபாநாயகரை பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர். திமுக இதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது. ஜெயலலிதா மறைவுக்கு பின்பு பல விசித்திரங்கள் நடந்துள்ளன. அதில் இதுவும் ஒன்று. சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றிய பின்பு திமுகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கையை திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு எடுப்பார்" என கூறினார்.
Last Updated : May 3, 2019, 11:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details