தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல்... பாக்யராஜ் அணியில் யார்..?

சென்னையில் நாளை நடைபெறவுள்ள தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிடும் கே.பாக்யராஜ் அணியின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது

நாளை நடைபெறுகிறது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல்
நாளை நடைபெறுகிறது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல்

By

Published : Sep 10, 2022, 12:51 PM IST

சென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். தற்போது உள்ள உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து நாளை (செப். 11) தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தற்போது தலைவராக உள்ள கே.பாக்யராஜ் மீண்டும் போட்டியிடுகிறார். எதிரணியில் திரைப்பட‌ இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் பாக்யராஜ் அணியின்‌ வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. தலைவர் பதவிக்கு பாக்யராஜ் போட்டியிடுகிறார். துணைத் தலைவராக ஆர் கண்ணன், காரைக்குடி நாராயணன் போட்டி. செயலாளர்கள் பதவிக்கு லியாகத் அலிகான், பாலசேகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இணைச் செயலாளர் பதவிக்கு மங்கை அரிராஜன், சின்னி ஜெயந்த், கவிஞர் முத்துலிங்கம், ரத்னகுமார்‌ ஆகியோர் போட்டியிடுகின்றனர். நாளை சென்னை மியூசிஸியன் யூனியனில் தேர்தல் நடைபெறுகிறது.

இதையும் படிங்க: பூஜையுடன் தொடங்கிய நடிகர் யோகி பாபுவின் புதிய திரைப்படம்!

ABOUT THE AUTHOR

...view details