சென்னை:மாநகராட்சி 200 வார்டுகளிலும் திமுக பெருவாரியாக வெற்றி பற்று மேயர் பதவியை தன்வசம் இழுத்துக் கொண்டது. மேலும் 15 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. மேயராக பிரியா ராஜன் பதவியேற்ற பிறகு கிட்டத்தட்ட இரண்டு மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் முடிந்துவிட்டது.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் அதிமுகவின் தலைவராக சதீஷ் குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சி அதிமுக தலைவராக சதீஷ் குமார், துணை தலைவர்களாக ஜான், சத்தியநாதன் ஆகியோரும், செயலராக கார்த்திக், கொறடாவாக கதிர்முருகன், பொருளாளராக சேட்டு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.