சென்னை: சென்னையில் அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள துணிவு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.
வலிமை படத்திற்குப்பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத் இணைந்துள்ள படம் துணிவு. போனி கபூர் தயாரிப்பில், வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் ஒருசில விடுபட்ட காட்சிகளை ஹெச்.வினோத் படமாக்கி வருகிறார். அதன் ஒருபகுதியாக இன்று இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் அஜித், மஞ்சு வாரியர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. அதில் அஜித் முகத்தில் முகமூடி அணிந்து இருக்கிறார். ஆனால் அந்த நபர் அஜித்தா அல்லது அவரது டூப்பா என்பது தெரியவில்லை. ஏனென்றால் அஜித் வெளிநாடுகளில் பைக் சுற்றுலாவில் இருக்கிறார்.
சென்னையில் நடைபெற்ற துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையின் முக்கியமான இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:சலார் படத்தில் பிரித்விராஜின் மாஸ் லுக் வெளியீடு