தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 26, 2022, 10:21 AM IST

ETV Bharat / state

கோயம்பேடு மார்க்கெட் நிலவரம் - குறைந்தது தக்காளி விலை!

கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ள நிலையில், தக்காளி விலை குறைந்துள்ளது.

குறைந்தது தக்காளி விலை
குறைந்தது தக்காளி விலை

சென்னை, கோயம்பேடு மார்கெட்டிற்கு கடந்த சில நாட்களாக காய்கறிகளின் வரத்து குறைந்து காணப்பட்டது. வெளிமாநிலங்களில் மழை பெய்ததால் காய்கறிகளின் வரத்து குறைந்ததாக கூறப்பட்டது. இதனால் அனைத்து காய்கறிகளின் விலையும் உச்சத்தை தொட்டது. குறிப்பாக தக்காளி ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் தற்போது கோயம்பேடு மார்கெட்டிற்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளது.

விலை நிலவரம்:நேற்றைய தினம் ஒரு கிலோ ரூ.80 விற்ற தக்காளி ரூ.60க்கும், ரூ.35க்கு விற்ற கேரட் ரூ.25க்கும், ரூ.80க்கு விற்ற அவரைக்காய் ரூ.60க்கும், ரூ.40க்கு விற்ற சேனைக்கிழங்கு ரூ.20க்கும் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது

வ.எண் பொருள் விலை (மே 26)
1 அவரைக்காய் ரூ.60
2 நெல்லிக்காய் ரூ.50
3 மக்காச்சோளம் ரூ.85
4 பீன்ஸ் ரூ.90
5 பீட்ரூட் ரூ.40
6 பாவற்காய் ரூ.40
7 கத்திரிக்காய் ரூ.40
8 முட்டைகோஸ் ரூ.20
9 குடைமிளகாய் ரூ.50
10 கேரட் ரூ.25
11 காலிபிளவர் ரூ.25
12 கொத்தவரை ரூ.169
13 சின்ன தேங்காய் ரூ.25
14 பெரிய தேங்காய் ரூ.28
15 வெள்ளரி ரூ.20
16 முருங்கைக்காய் ரூ.55
17 பெரிய பூண்டு ரூ.160
18 சின்ன பூண்டு ரூ.150
19 இஞ்சி ரூ.40
20 பச்சை பட்டாணி ரூ.90
21 பச்சை மிளகாய் ரூ.15
22 கருணைக்கிழங்கு ரூ.45
23 கோவக்காய் ரூ.20
24 வெண்டைக்காய் ரூ.40
25 மாங்காய் ரூ.25
26 மரவள்ளி ரூ.67
27 நூக்கல் ரூ.28
28 பெரிய வெங்காயம் ரூ.15
29 சாம்பார் வெங்காயம் ரூ.25
30 பீர்கங்காய் ரூ.89
31 உருளைக்கிழங்கு ரூ.30
32 முள்ளங்கி ரூ.12
33 சேனைகிழங்கு ரூ.20
34 சேப்பங்கிழங்கு ரூ.48
35 புடலங்காய் ரூ.25
36 சுரைக்காய் ரூ.20
37 பெங்களூர் தக்காளி ரூ.60
38 லோக்கல் தக்காளி ரூ.60
39 வாழைப்பூ ரூ.30
40 வாழை தண்டு ரூ.06.50
41 பூசணி ரூ.26

இதையும் படிங்க:காய்ந்த மிளகாய் கிலோ ரூ.280 - விவசாயிகள் ஹாப்பி - வாடிக்கையாளர்கள் விரக்தி

ABOUT THE AUTHOR

...view details