சென்னை : கரோனா தொற்று காரணமாக ஒரு ஆண்டுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் காலதாமதமாக 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. நவம்பர் 1ஆம் தேதி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக 10 நாட்களுக்கும் மேலாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால், பாடத் திட்டங்களை நடத்தி முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் இந்த ஆண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.