தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மர்ம காய்ச்சலால் உயிரிழந்த இளைஞரின் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பி உள்ளோம் - அமைச்சர் மா. சுப்பிரமணியன் - சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை

திருச்சி மாவட்ட இளைஞர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழக்கவில்லை. அதேபோல, H3N2 வைரஸ் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தாரா என்பது குறித்து உறுதி செய்ய அவரது மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 13, 2023, 7:59 PM IST

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சூரியகுமார் என்ற 10 வயது சிறுவன் கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தன்னுடைய வீட்டில் சானிட்டரி பாட்டில் கையில் வைத்திருந்த போது தவறி நெருப்பில் விழுந்ததில் உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. முதற்கட்ட சிகிச்சைக்குப் பின்னர் அச்சிறுவன் உயிருக்கு போராடி வந்த நிலையில் தன் மகனை கருணை கொலை செய்திட வேண்டி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுவனின் தாயார் மனு அளித்திருந்தார்.

இந்த நிகழ்வை தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கண்காணிப்பில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை சிகிச்சையில் சிறுவன் சூரியகுமாருக்கு கடந்த ஓராண்டு காலத்தில் ஆறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு குணப்படுத்தப்பட்டுள்ளார்.

சிறுவன் சூரியகுமார் நல்ல முறையில் குணமடைந்ததை தொடர்ந்து சென்னை அரசினர் தோட்டம் ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளித்த ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினரை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேரில் வரவழைத்து பாராட்டி சிறப்பித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியன் கூறியதாவது, தீக்காயம் ஏற்பட்ட சிறுவனுக்கு தொடர்ந்து சிறுநீரக செயலிழப்பு, ரத்த கொதிப்பு போன்ற பல பாதிப்புகள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்தது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி உடனடியாக சிறுவன் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கை கால்கள் அசைக்க முடியாத நிலையில் இருந்த சிறுவனின் உடல் நிலையை சரி செய்ய ஆறு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு மருத்துவ சிகிச்சைகளுக்கு மணிமகுடமாய் இந்த சிறுவனை காப்பாற்றிய சிகிச்சை அமைந்துள்ளது என்றார்.

மேலும், இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை பெருகி வருகிறது. ஒன்றிய அரசு சுகாதாரத்துறையின் சார்பில் தகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் 1586 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 263 பேர் காய்ச்சல் பாதிப்பு கொண்டவர்களாக கண்டறியப்பட்டு தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது என கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், ”சமுதாய மற்றும் சமூக விழாக்களில் பெரிய அளவில் கூட்டம் கூடும்போது முகக் கவசம், தனி மனித இடைவெளி அவசியம் என்றும், பள்ளி மாணவர்களுக்கும் தொடர்ச்சியாக வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.

நேற்று திருச்சி தெப்பக்குளத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் மர்ம காய்ச்சலால் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், ”மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே மிகவும் மோசமான உடல் நிலை பாதிப்பால் அவதிப்பட்ட இளைஞர் உயிரிழந்துள்ளார். நேற்று இறந்தவருக்கு கரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

உயிரிழப்புக்கு காரணம் கரோனா பாதிப்பு இல்லை. ஆனால் H3N2 வைரஸால் அவர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாரா என்பது குறித்து அறிய ஆய்வகத்திற்கு இறந்த இளைஞரின் மாதிரிகளை அனுப்பி உள்ளோம்” என்றார்.

இதையும் படிங்க: 12 வருடத்திற்கு பிறகு பயன்பாட்டுக்கு வரும் சென்னையின் அடையாளம்!

ABOUT THE AUTHOR

...view details