தமிழ்நாடு, கேரளா, குஜராத், புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேச மாநில, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் வாக்கு எண்ணுவது தொடர்பாக பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதனை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதிரி வாக்கு எண்ணும் முகாமிலும் அவர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர்கள் உமேஷ் சின்ஹா, சந்தீப் சக்சேனா உள்ளிட்டோர் பார்வையிட்டனர். அப்போது தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாஹூ உடன் இருந்தார்.
மாதிரி வாக்கு எண்ணும் முகாம்; தலைமை தேர்தல் துணைஆணையர்கள் ஆய்வு! - தலைமை துணை ஆணையர்கள்
சென்னை: அண்ணா பல்கலை கழகத்தில் நடைபெற்ற மாதிரி வாக்கு எண்ணும் முகாமினை தலைமை தேர்தல் துணை ஆணையர்கள் பார்வையிட்டனர்.
![மாதிரி வாக்கு எண்ணும் முகாம்; தலைமை தேர்தல் துணைஆணையர்கள் ஆய்வு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3291889-thumbnail-3x2-ce.jpg)
தலைமை தேர்தல் துணைஆணையர்கள்
மாதிரி வாக்கு எண்ணும் மையம்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் கூறுகையில், இந்த பயிற்சி மூலம் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் வாக்கு எண்ணும் காலத்தில் சூழலுக்கு ஏற்ப சட்ட விதிகளுக்கு உட்பட்டு, என்ன முடிவு எடுப்பது, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். இம்முறை வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டியுள்ளதால் ஒப்புகை சீட்டை எண்ணிய பிறகே சுற்றுகளின் முடிவுகள் அறிவிக்கப்படும், என்றார்.