தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கருணாநிதியின் அதே பேனா, இப்போது ஸ்டாலின் கையில்... - mk stalin

சென்னை: முதலமைச்சராக பதவியேற்றுள்ள மு.க. ஸ்டாலின் கருணாநிதி பயன்படுத்திய அதே மாடல் பேனா மூலம் இன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

fas
fdas

By

Published : May 7, 2021, 5:41 PM IST

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் இன்று பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து, அவர் கரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கும் திட்டம் உள்ளிட்ட 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.

ஐந்து கோப்புகளிலும் அவர் கருணாநிதி பயன்படுத்திய அதே மாடல் பேனாவை பயன்படுத்தி கையெழுத்திட்டார்.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பயன்படுத்திய பேனா Wality 69JT என்ற மாடல் ஆகும். தற்போது அதே மாடல் பேனாவை மு.க. ஸ்டாலின் பயன்படுத்தியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதுகுறித்து திமுக தொண்டர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில், “மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்நாள் அவரது கையெழுத்துகளை இட்டு பணிகளை தொடங்கியுள்ளார்.

அதற்காக அவர் Wality 69JT என்ற fountain பேனாவை பயன்படுத்தியுள்ளார். அவரது தந்தையும் முன்னாள் முதல்வருமான தலைவர் கலைஞர் அவர்கள் உபயோகப்படுத்திய அதே மாடல் பேனாவை தற்போது முதல்வர் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் விலை 500 ரூபாய். ஏற்கெனவே தமிழ்நாட்டில் கலைஞர் பேனா என அழைக்கப்படும் இந்த பேனா விற்பனை இனி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என பதிவிட்டுள்ளார்.

மேலும், தந்தை பயன்படுத்திய மாடல் பேனாவை ஸ்டாலின் தொடர்வதுபோல் அவர் வழியிலேயே ஆட்சியையும், கட்சியையும் வழிநடத்தி செல்வார் என்று திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details