இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், “ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட துறைகளுக்கு தேவையான நிதி கிடைக்க அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் ஆட்சேபிக்கும் வகையில் உள்ளது. குறைந்த அளவில் கடன் வசதி கிடைத்திருக்கும் மாவட்டங்களுக்குக் கூடுதலாக நிதி ஆதாரங்கள் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது வரவேற்கதக்கது என்றாலும், சிறப்பாக செயல்படும் மாவட்டங்களிலிருந்து நிதியை மற்ற மாவட்டங்களுக்கு கொண்டுச் செல்ல வேண்டும் என்ற விதிமுறை பாகுபாட்டை காட்டும் விதமாக அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களும் (புதிய மாவட்ட வரையறைக்கு முன்) அதிகக் கடன் வசதி கிடைக்கும் மாவட்டங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. நாட்டில் வேறு எந்த மாநிலத்திற்கும் இதுபோன்ற அளவுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. ரிசர்வ் வங்கியின் இந்த விதிமுறைகளால் தமிழகத்தில் கடன் உதவி கிடைப்பது ஊக்குவிக்கப்படாது.