சென்னை சாலிகிராமம் மா.போ.சி தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லட்சுமி. இவருக்கு சத்யா (34) என்ற மகள் உள்ளார். இவரது தந்தை இறந்துவிட்டதால் திருமணம் செய்து கொள்ளாமல், வடபழனியில் உள்ள தனியார் மாலில் ஹவுஸ் கீப்பிங் பணி செய்து கொண்டு, தாய் லட்சுமியுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு (ஆக.18) சத்யா பணியை முடித்துவிட்டு வீட்டின் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து சத்யா மீது விழுந்தது. இவரின் அலறல் சத்தம் கேட்டு அறையில் இருந்த அவரது தாய், மகளை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே சத்யா இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!
சென்னை: சாலிகிராமத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த விருகம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, வாடகை வீட்டின் உரிமையாளர் ஜெய்சங்கரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இடிந்து விழுந்த வீடு மிகவும் பழுதாக இருந்ததால், ஊரடங்கிற்கு முன்பே அட்வான்ஸ் தொகையை கொடுத்து வீட்டை காலி செய்யுமாறு வலியுறுத்தியதாகவும், ஊரடங்கு முடிந்த பின்னர் வீட்டை காலி செய்வதாகக் கூறியதாகவும், காவல்துறையினரிடம் வீட்டின் உரிமையாளர் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.
இதையும் படிங்க:தின்பண்டங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் திடீர் தீ விபத்து