தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கதவை மூடாமல் தூங்கினார் வீட்டிலிருந்த தங்கநகை அபேஸ்! - கொள்ளையன் முருகன் புழல் சிறையில் அடைப்பு

சென்னை: துரைப்பாக்கம் அருகே கதவை மூடாமல் தூங்கிய சேகர் என்பவரது வீட்டிலிருந்து 30 சவரன் நகைகளை திருடிய கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

கதவை மூடாமல் தூங்கியவர் வீட்டிலிருந்து கொள்ளையடித்த திருடன் கைது
கதவை மூடாமல் தூங்கியவர் வீட்டிலிருந்து கொள்ளையடித்த திருடன் கைது

By

Published : Dec 4, 2019, 2:45 PM IST

சென்னை துரைப்பாக்கம் கோவிந்தசாமி பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவர் கடந்த 7ஆம் தேதி இரவு வீட்டின் கதவை மூடாமல் தூங்கியுள்ளார்.

அப்போது வீட்டினுள் புகுந்த அடையாளம் தெரியாத நபர் 30 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளார். இதனையடுத்து சேகர் அடையார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில் சிசிடிவி கேமராக்களை வைத்து கொள்ளையனை காவல்துறையினர் தேடிவந்தனர். தற்போது சேகர் வீட்டில் திருடிய கொள்ளையன் முருகன் என்ற இளைஞர் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து முருகனை கைதுசெய்த காவல்துறையினர் அவரிடமிருந்து சுமார் 24.5 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கொள்ளையடித்த பணத்தை அங்கேயே அமர்ந்து பொறுமையாக எண்ணிய கெள்ளையன்!

ABOUT THE AUTHOR

...view details