தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் ஜூலை இறுதியில் வெளியிட திட்டம் - The results of the postgraduate teacher examination are scheduled to be released by the end of July

முதுகலை ஆசிரியர் உடற்கல்வி இயக்குநர் நிலை ஒன்று கம்ப்யூட்டர் பயிற்றுனர் நிலை ஒன்று ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் இறுதியில் வெளியிட திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் ஜூலை இறுதியில் வெளியிட திட்டம்
முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் ஜூலை இறுதியில் வெளியிட திட்டம்

By

Published : May 16, 2022, 7:03 PM IST

சென்னை:ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2020-21ஆம் ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர் உடற்கல்வி இயக்குநர் நிலை ஒன்று கம்ப்யூட்டர் பயிற்றுநர் நிலை ஒன்று பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் 2022 பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட்டது.

அதன் மீதான உத்தேச விடை குறிப்புகள் 2022 ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிடப்பட்டன. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட உத்தேச விடை குறிப்பின் மீது வாட்ஸ்அப் மூலம் வினைகளை ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியம் பெற்றது. அப்போது 29,141 விண்ணப்பதாரர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு மற்றும் பருவ தேர்வு நடைபெற்று வருவதால், பகுதி பாடவாரியாக மட்டுமே பாட வல்லுனர்கள் அழைக்கப்பட்டு விடை குறிப்பினை மறு ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகின்றன. இந்தப் பனி மூடிய குறைந்தது ஒரு மாத கால அவகாசம் தேவைப்படும். இந்தப் பணி முடிவுற்றதும் இறுதி விடைக்குறிப்பு வெளியிடப்படும்.

அதன்பின் விடைத்தாள்கள் கம்ப்யூட்டர் மூலம் திருத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இதற்கு குறைந்தபட்சம் 45 நாள்கள் தேவைப்படும். அதன்பின் சான்றிதழ் சரிபார்ப்புக்கு குறைந்தபட்ச ஒரு மாத கால அவகாசம் தேவைப்படும், எனவே தேர்வு பட்டியல் ஜூலை மாதம் இறுதியில் வெளியிட அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றன எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

ABOUT THE AUTHOR

...view details