சென்னை:இதுதொடர்பாக, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் சுந்தரம்மாள், பொதுச்செயலாளர் நூர்ஜகான் ஆகியோர் பேசுகையில், "தமிழ்நாட்டில் சத்துணவு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தார்.
சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து பதவி உயர்வு, ஊதிய உயர்வு வழங்கிடவேண்டும். இந்தத் திட்டத்தில் 38 ஆண்டுகளாக பணிபுரிந்து ஓய்வு பெறுகின்ற சத்துணவு ஊழியர்களுக்கு தற்போது சிறப்பு ஓய்வூதியமாக வழங்கப்படும் 2,000 ரூபாயில் வாழ்க்கை நடத்தமுடியாது.
எனவே, கேள்விக்குறியாக இருக்கின்ற சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரமும், அமைப்பாளர்களுக்கு ஒட்டு மொத்த தொகையாக ரூ. 5 லட்சமும், சமையல் உதவியாளர்களுக்கு மூன்று லட்சம் ரூபாயும் வழங்கிட வேண்டும்.