தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயிலில் பெட்ரோல் குண்டு வீச்சு; கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்... பின்னணி என்ன? - at Veerabhadra Swamy Temple in Chennai

Petrol Bomb Thrown on Chennai Temple: 'நான்கு வருடமாகக் கும்பிட்டு வந்த சாமி தனக்கு ஏதும் தராததால் கோயில் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக' சென்னை வீரபத்திரர் கோயிலில் பெட்ரோல் குண்டு வீசிய நபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Petrol Bomb Thrown on Chennai Temple
கோயிலில் பெட்ரோல் குண்டு வீச்சு; கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்.. பின்னணி என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2023, 8:51 PM IST

கோயிலில் பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை: கொத்தால்சாவடி கோவிந்தப்பா நாயக்கர் தெருவில் வீரபத்திரன் சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில் மீது இன்று (நவ.10) முரளி கிருஷ்ணன் என்பவர் தண்ணீர் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி திரியை பற்றவைத்து கோயிலின் உள்ளே உள்ள வீரபத்திரன் சுவாமி சிலையின் மீது எரிந்துள்ளார். இந்த செயலை முன்கூட்டியே பார்த்த கோயில் பூசாரி கோயிலுக்கு வெளியே ஓடி வந்ததால் காயம் ஏதும் இன்றி உயிர் தப்பினார்

இந்த சத்தம் கேட்டு அருகே இருந்த போக்குவரத்துத் துறை காவல்துறை ராமமூர்த்தி சம்பவ இடத்திற்குச் சென்று முரளி கிருஷ்ணன் பிடித்துள்ளார். மேலும், இதுகுறித்து கொத்தால் சாவடி காவல் நிலைய காவல்துறைக்கும் தகவல் தெரிவித்து அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

இதையும் படிங்க:பாரிமுனை கோயிலுக்குள் பெட்ரோல் குண்டு வீசியவர் கைது - அண்ணாமலை கண்டனம்!

பின்பு கொத்தால் சாவடி காவல்துறையால் கைது செய்யப்பட்ட முரளி கிருஷ்ணனிடம் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்தபோது, சென்னை எம்கேபி நகர் தென்மேற்கு குறுக்கு தெருவில் வசிக்கும் முரளி கிருஷ்ணன்(39) என்பதும், இந்நபர் மீது ஏற்கனவே கொத்தால் சாவடி காவல் நிலையத்தில் 2 வழக்குகள், எம்.கே.பி.நகர் காவல் நிலையம், பூந்தமல்லி காவல் நிலையம், புளியந்தோப்பு காவல் நிலையங்களில் ஒரு வழக்குகள் என 5 வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலும் முரளி கிருஷ்ணன் கடந்த நான்கு வருடமாக, வீரபத்திரன் சுவாமியை வணங்கி வருவதாகவும் ஆனால் பதிலுக்கு வீரபத்திரன் சாமி தனக்கு எந்த பலனையும் தரவில்லை என்பதாலும் ஆத்திரம் அடைந்து வீரபத்திரன் சுவாமி மீது பெட்ரோல் கொண்டு வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், முரளி கிருஷ்ணன் டீ கடையில் அமர்ந்து கொண்டு பெட்ரோல் பாம் தயாரிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக, இச்சம்பவம் குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு பிரிவினைவாத அமைப்புக்களைக் கட்டுப்படுத்த தவறியதன் விளைவாகவே, சென்னை பாரிமுனை அருகே கோயிலுக்குள் பீர் பாட்டிலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எறியக் காரணம் என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:"அரசியல் அழுத்தத்தால் தமிழக மீனவர்கள் கைது" - இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டி!

ABOUT THE AUTHOR

...view details