தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுப்பேருந்துக்குள் மழை நீர் விழுந்ததால் நனைந்தபடி பயணம் - பொதுமக்கள் அவதி! - வரும் நாட்களில் மழையின் தாக்கம் அதிகரிக்க கூடும்

சென்னையில் அரசுப்பேருந்துக்குள் மழை நீர் வடிந்ததால் பேருந்தில் போதிய வசதிகள் இருந்தும் பயணிகள் மழையில் நனைந்தபடி பயணம் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு பேருந்துக்குள் மழை வடிந்ததில் நனைந்தபடி பயணம்- பொதுமக்கள் அவதி!
அரசு பேருந்துக்குள் மழை வடிந்ததில் நனைந்தபடி பயணம்- பொதுமக்கள் அவதி!

By

Published : Nov 1, 2022, 4:25 PM IST

சென்னைமற்றும் புறநகர் பகுதியில் நேற்று மாலையிலிருந்து தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் புறநகர்ப்பகுதியில் உள்ள தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி, பல இடங்களில் குளம் போல் காட்சியளிக்கின்றது.

இந்தநிலையில் வண்டலூரில் இருந்து சென்னை பிராட்வேக்கு செல்லக்கூடிய தடை எண் 21 G எண் TN 01 N 8735 என்ற மாநகரப்பேருந்திற்குள் பயணிகள் அமரும் இடத்தில் மழை நீர் கொட்டுவதால், பயணம் செய்த பயணிகள் சிரமத்துடன் பயணம் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் வரும் நாட்களில் மழையின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்பதால், அரசுப்பேருந்துகளில் அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி மழையால், மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசுப்பேருந்துக்குள் மழை நீர் விழுந்ததால் நனைந்தபடி பயணம் - பொதுமக்கள் அவதி!

மாநகரப்பேருந்தில் பயணம் செய்த பயணிகள் இந்த வீடியோவை எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

ABOUT THE AUTHOR

...view details