தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெட் கட்டி பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நபர் - தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் - தர்ம அடி

அம்பத்தூர் அருகே பெட் கட்டி பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நபருக்கு தர்ம அடி கொடுத்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்

பெட் கட்டி பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி
பெட் கட்டி பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி

By

Published : Oct 13, 2022, 10:16 PM IST

சென்னை: அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியில் ஒரு வீட்டினுள் புகுந்த அடையாளம் தெரியாத ஒருவர் பெண்களிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அப்பெண் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தவறாக நடக்க முயன்ற அந்நபரை பிடித்து சரமாரியாக தாக்கினர்.

மேலும், அந்த நபர் யார் என விசாரித்ததில் தனது நண்பர்கள் குறிப்பிட்ட ஒரு பெண்ணை தொட முடியுமா என சவால் விட்டதாகவும், நான் அதை செய்து காட்டுவேன் எனவும் பெட் கட்டி வந்ததாகவும் கூறினான்.

மேலும் இவ்வாறு செய்ய தூண்டிய நபர்கள் யார் என கேட்கும் பொதுமக்களுக்கு என் தலையை அருத்தாலும் சொல்லமாட்டேன் என கூறிய நபரை அப்பகுதி மக்கள் அம்பத்தூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள் இவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இதையும் படிங்க: ‘திருநங்கைகள் அகதிகளாக வாழும் நிலை நிச்சயமாக மாற்றப்படும்’ - அமைச்சர் அன்பில் மகேஷ்

ABOUT THE AUTHOR

...view details