தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் கட்டாயமானது இ-பதிவு! - chennai police

பொதுமக்கள் காலை 10 மணி முதல் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு வெளியே செல்ல இ-பதிவு அவசியம் என சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

காலை 10 மணி முதல் பொதுமக்கள் மாவட்ட எல்லைக்கு வெளியே செல்ல இ-பதிவு கட்டாயம்!
காலை 10 மணி முதல் பொதுமக்கள் மாவட்ட எல்லைக்கு வெளியே செல்ல இ-பதிவு கட்டாயம்!

By

Published : May 18, 2021, 10:04 AM IST

Updated : May 18, 2021, 11:50 AM IST

தமிழ்நாடு அரசின் கரோனா நோய்தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், இன்று (மே.18) முதல் முறையான ஊரடங்கு பணிகளை தீவிரப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில், ’’சென்னை பெருநகரில் உள்ள 12 மாவட்ட காவல் எல்லைகளில் 13 எல்லை வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

காலை 10 மணி முதல் இ-பதிவு கட்டாயம்!

மேலும், அப்பகுதியிலேயே வசிக்கும் மக்கள் அவர்களுக்கு வேண்டிய காய்கறி, உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல் அறிவுரைப்படி காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மேற்படி அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படுவர்.

சென்னையில் கட்டாயமானது இ-பதிவு!

சென்னை பெருநகரில் அனைத்து காவல் நிலைய சரகங்களையும் ஒருங்கிணைத்து முக்கிய சந்திப்புகள், சரக எல்லைகள் என 153 வாகனத் தணிக்கைச் சாவடிகள் அமைக்கப்பட்டு காவல் குழுவினர் மூலம் கண்காணிக்கப்படுகிறது. அரசால் அனுமதிக்கப்பட்ட காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை நேரத்தை மீறி வெளியே வருபவர்கள் உரிய இ-விண்ணப்பம் பதிவு செய்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

இதையடுத்து, இ-பதிவு செய்யாமல் வெளியே வருபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவுறுத்தப்படுகிறது. ஒவ்வொரு காவல் நிலைய எல்லையில் குறிப்பிட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து உரிய சாலை தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதும், சென்னை பெருநகரில் 348 செக்டார்கள் உருவாக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றன. பொதுமக்கள் வசிக்கும் சரகத்திலிருந்து மறு காவல் நிலைய எல்லைக்குள் செல்லாதவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மறு காவல் நிலைய எல்லைக்கு செல்பவர்கள் உரிய இ-பதிவு செய்திருக்க வேண்டும். இ-பதிவு செய்யாதவர்கள் மற்றொரு செக்டார் பகுதியில் அனுமதிக்கப்படமாட்டார்கள். நோய்த்தொற்று தடுப்பு கட்டுப்பாட்டு பகுதியில் (Containment zone) இருந்து யாரும் வெளியில் வர அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

கரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்கு பொதுமக்கள் தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி நடந்து கொள்ளுமாறும், முன்களப்பணியாளர்கள், காவல் பணியில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிடவும் சென்னை பெருநகர காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதையும் படிங்க: உலக சுகாதார அமைப்பின் தரவிலிருந்து மாறுபடும் உத்தரப் பிரதேசம் - ஈடிவி பாரத்தின் கள அறிக்கை

Last Updated : May 18, 2021, 11:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details