சென்னையில் மிகவும் பிரபலமான காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனை அமோகமாக விற்பனையாவது வழக்கம். புரட்டாசி மாதம் என்பதால் அங்கு கூட்டம் வழக்கத்தை விட சற்று குறைந்தது. விற்பனை குறைந்தாலும், இறைச்சி வகைகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. புரட்டாசி மாதம் தொடங்கினாலே ஒரு சிலர் அசைவம் சாப்பிடுவதில்லை.
இந்நிலையில், புரட்டாசி முடிந்த முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று (அக்டோபர் 18) காசிமேடு மீன் மார்க்கெட்டில் அதிகாலை 3 மணி முதல் தேன் கூட்டில் தேனீ மொய்ப்பது போல் மக்கள் கூட்டம் அலைமோதியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது அசைவ பிரியர்கள் நனைந்த படி மீன்களை வாங்கிச் சென்றனர்.