தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆளுநர் நடவடிக்கை குறித்து முதலமைச்சர் கடிதம்: குடியரசுத் தலைவர் பதில் என்ன? - What was the President s response

ஆளுநர் விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குறிப்புடன் குடியரசுத் தலைவர் ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

ஆளுநர் நடவடிக்கை குறித்து முதலமைச்சர் கடிதம்: குடியரசு தலைவர் பதில் என்ன?
ஆளுநர் நடவடிக்கை குறித்து முதலமைச்சர் கடிதம்: குடியரசு தலைவர் பதில் என்ன?

By

Published : Jan 14, 2023, 5:58 PM IST

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் கடந்த 9ஆம் தேதி சட்டமன்றத்தில் நடந்து கொண்ட விதம் குறித்தும், தொடர்ந்து தமிழ்நாட்டு நலனுக்கு எதிராக அரசியல் சாசன விதிகளை மீறி செயல்பட்டு வருவது குறித்தும் குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதினார்.

அதனை நேற்று முன்தினம் (ஜன.12) திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வழங்கினர். அப்போது ஆளுநர் செயல்பட்டுவரும் விதம் குறித்து விரிவாக விளக்கினர். அதனை விரிவாகக் கேட்டறிந்த குடியரசுத் தலைவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து, தொடர் நடவடிக்கைக்காக முதலமைச்சரின் கடிதத்தை குடியரசுத் தலைவர் ஒன்றிய அரசுக்கு அனுப்பியுள்ளார். மேலும் குடியரசுத் தலைவர் தனது குறிப்புடன் முதலமைச்சரின் கடிதத்தை ஒன்றிய அரசுக்கு அனுப்பியுள்ளதாக, உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பொங்கல் வாழ்த்து செய்தியில் ஆளுநர் ரவியை சாடிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details