சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் காணாமல்போன, திருடப்பட்ட ஆயிரத்து 193 செல்போன்களை 12 காவல் மாவட்ட சைபர் பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை சென்னை காவல் துறை ஆணையர் மகேஷ்குமார் உரியவர்களிடம் வழங்கினார்.
அப்போது, மகேஷ் குமார் பேசுகையில், "12 காவல் மாவட்டங்களிலும் 12 காவல் துறை துணை ஆணையர்களிடமும் காணொலி அழைப்புமூலம் பொதுமக்கள் புகார்கள் கொடுத்துவருகின்றனர். தற்போது சைபர் குற்றங்கள் அதிகம் நடப்பதால் 12 காவல் மாவட்டங்களிலும் சைபர் பிரிவாக தொடங்கப்பட்டுள்ளது. சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள் ஆணையர் அலுவலகம் வந்துதான் புகார் கொடுக்க வேண்டிய நிலை இருந்தது.
தற்போது அந்தந்த காவல் மாவட்ட துணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் பிரிவிலேயே புகார் கொடுக்கலாம். இதுவரை 600-க்கும் மேற்பட்ட சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள் வந்துள்ளன. இதில், 50-க்கும் மேற்பட்ட புகார்கள் தீர்த்துவைக்கப்பட்டுள்ளன. சைபர் குற்றத்தால் பறிக்கப்பட்ட 18 லட்ச ரூபாயை உரியவர்களுக்குத் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.