சென்னை காமராஜ் சாலை சர்வீஸ் ரோட்டில், நேற்று இரவு (டிச.14) மைலாப்பூர் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் தனியாக நின்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஆயுதப்படைக் காவலர் பாபு (35) என்பவர் இளம்பெண்ணிடம் ஐஸ்கிரீம் சாப்பிட வருமாறு அழைத்துள்ளார்.
அதற்குப் பெண் மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த காவலர் பாபு அவரிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் பாபு அங்கிருந்து கடற்கரைக்குச் சென்றுவிட்டு சிறிது நேரம் கழித்து மீண்டும் அவ்வழியாக வந்துள்ளார். அப்போது, தனது குடும்பத்தாருடன் நின்றுகொண்டிருந்த இளம்பெண் நடந்த சம்பவம் குறித்து அவரது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.