தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டாஸ்மாக் பாராக செயல்பட்ட பேருந்து நிறுத்தம்: ஒரு மணி நேரத்தில் அதிரடி காட்டிய போலீஸ்! - சென்னை அருகே திருவல்லிக்கேணி

சென்னை திருவல்லிக்கேணியில் பேருந்து நிறுத்தத்தை பார் போன்று பயன்படுத்துவதாக சமூக வலைதளம் மூலம் புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

டாஸ்மாக் பாராக செயல்பட்ட பேருந்து நிறுத்தம்: ஒரு மணி நேரத்தில் அதிரடி காட்டிய போலீஸ்..!
டாஸ்மாக் பாராக செயல்பட்ட பேருந்து நிறுத்தம்: ஒரு மணி நேரத்தில் அதிரடி காட்டிய போலீஸ்..!

By

Published : Jul 26, 2022, 8:24 PM IST

சென்னை:திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை பகுதியில் உள்ள கெலட் உயர்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு மது அருந்துபவர்கள் டாஸ்மாக் பார் போல பயன்படுத்தி வருவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாவதாக சமூக வலைதளத்தில் வீடியோவுடன் புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கிவிட்டு பேருந்து நிலையத்தில் குடிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு காவல்துறை நடவடிக்கை எடுக்கும்படி சென்னை காவல்துறையின் சமூக வலைதளம் பக்கத்தை இணைத்து புகார் அளித்துள்ளனர்.

புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, பேருந்து நிலையத்தில் குடிபோதையில் இருந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி உள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள மதுபாட்டில்கள் மற்றும் குப்பைகளை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு சுத்தப்படுத்தி உள்ளனர்.

போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையை புகைப்படமாக எடுத்து புகார் அளித்த நபருக்கு சென்னை காவல்துறை சமூக வலைதளம் மூலம் பதில் கொடுத்துள்ளது.

இதையும் படிங்க:திமுக எம்.பி.க்கள் 6 பேர் உட்பட 19 பேர் மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம்!

ABOUT THE AUTHOR

...view details