சென்னை: போரூர் சப் - இன்ஸ்பெக்டர் ராஜசேகர் நேற்று இரவு அய்யப்பன்தாங்கல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கிருந்த தனியார் மருத்துவமனை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைப்பதுபோல், சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார்.
மேலும் போலீசார் பயன்படுத்தும் எப்.ஆர்.எஸ் (Face recognition software) ஆப் மூலம் அந்த நபரின் முகத்தை புகைப்படம் எடுத்து பார்த்துள்ளனர். அப்போது அவர் மயிலாடுதுறையை சேர்ந்த கார்த்திக் (என்ற) கர்லிங் கார்த்திக் (27) என்பதும்; இவர் மேல் மயிலாடுதுறை வைத்தீஸ்வரன்கோவில் போலீஸ் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்டப் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.