சென்னை:கால்பந்து வீராங்கனை பிரியா தவறான சிகிச்சையால் மரணமடைந்த விவகாரத்தில் இரண்டு மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மருத்துவர்கள் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.
ஜாமின் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், விசாரணைக்கு ஆஜராக நேற்று இரவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். போலீசார் அளித்த சம்மனை அவர்களது உறவினர்கள் பெற்று கொண்ட நிலையில், சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் உடனடியாக கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.