தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுபோதையில் தாயை கொலை செய்த மகன் கைது! - ராணிப்பேட்டை தாய் பாலியல் வன்கொடுமை

ராணிப்பேட்டை அருகே மதுபோதையில் தாயை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த முன்னாள் காவலரை போலீசாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 15, 2023, 10:51 AM IST

Updated : Mar 15, 2023, 3:26 PM IST

ராணிப்பேட்டை: ஆற்காடு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் காவலர். அவருக்கு வயது 32. அவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி வந்த அந்த நபர் நன்னடத்தை காரணமாக கடந்த ஆண்டு காவலர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

சொந்த ஊரில் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து தனது தாயாருடன் தகராறில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டு வந்துள்ளார். இந்நிலையில், அந்த இளைஞரின் சகோதரி தனது தாயை கடந்த சில நாட்களாக செல்போனில் தொடர்பு கொண்டு பேச முடியாததால் சந்தேகமடைந்து நேரடியாக வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது வீட்டில் 53 வயதான தனது தாய் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சம்பவம் தொடர்பாக ஆற்காடு கிராமிய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற ஆற்காடு போலீசார் 53 வயதான தாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராணிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் உயிரிழந்த பெண்ணின் மகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் முன்னாள் காவலரான அந்த இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, மதுபோதையில் தாயை கற்பழித்து கொலை செய்ததாக இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர் அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மதுபோதையில் தாய் என்றும் பாராமல் ஒரு பெண்ணை கற்பழித்து கொலை செய்த கொடூர மகனின் செயல் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மாபெரும் சமூக சீரழிவு என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: காதலியால் சிக்கிய உத்தம திருடன்.. கோனிகா கலர் லேப் ஓனர் கொள்ளை சம்பவத்தில் திடீர் திருப்பம்!

Last Updated : Mar 15, 2023, 3:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details