தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பகையாளி வீட்டை மறந்து, பக்கத்து வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - சென்னை அண்மைச் செய்திகள்

சென்னையில் பகையாளி வீட்டை மறந்து தவறுதலாக பக்கத்து வீட்டில் பெட்ரோல் குண்டு வீசய ரவுடி, காவல்துறையினரால் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி மணி
கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி மணி

By

Published : Oct 21, 2021, 4:54 PM IST

சென்னை: திருவிக நகரைச் சேர்ந்தவர் மணி. பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இவர் கடந்த ஜூலை மாதம் முதல் தண்டையார்பேட்டையில் உள்ள கைலாசம் தெருவின் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருகிறார். அப்பகுதியில் ஏற்பட்ட தகராறில் மூதாட்டி ஒருவரை வெட்டிய வழக்கில், மணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறைக்கு சென்று திரும்பிய மணி, தன்னை காவல் துறையில் பிடித்து கொடுத்தவரை பழிவாங்க நினைத்துள்ளார். தொடர்ந்து பகையாளியின் வீட்டில் வீச பெட்ரோல் குண்டையும் அவர் தயாரித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி மணி

இந்நிலையில் பகையாளியின் வீட்டை மறந்த மணி, அதற்கு பக்கத்து வீட்டில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியோடியுள்ளார். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தகவலறிந்து சென்ற தண்டையார்பேட்டை காவல்துறையினர் , மணியை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details