சென்னை:மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த ரவி (61) என்பவர் தாம்பரம் தபால் நிலையத்தில் பணியாற்றி வந்த நிலையில் சில காரணங்களுக்காகப் பணி நீக்கம் செய்யப்பட்டார். ஆனாலும் ரவி தபால் நிலைய முத்திரை பொருத்தப்பட்ட சீருடையுடன் வலம் வந்து தான் பணியில் இருப்பது போல் காட்டிக்கொண்டு, தபால் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தாம்பரம், முடிச்சூர், லட்சுமி நகர், பல்லாவரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பலரிடம் மூன்று லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை பணம் வாங்கிக் கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளார்.
இதனால் பணம் கொடுத்து ஏமாந்த சிலர் தாம்பரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் ரவியைக் கைது செய்ததும் தகவலறிந்து அவரால் ஏமாற்றப்பட்ட சுமார் 15க்கும் மேற்பட்டோர் தாம்பரம் காவல் நிலையம் திரண்டு புகார் அளித்தனர். பின்னர் காவல் துறை விசாரணையில் இது போல் சுமார் ஒரு கோடிக்கும் மேலாகப் பலரிடம் ரவி ஏமாற்றியிருப்பது தெரியவந்ததையடுத்து. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.