தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டு உரிமையாளர்களிடம் மோசடி - தலைமறைவானவரை கைது செய்த காவல்துறை - chennai latest news

சென்னையில் வீட்டு உரிமையாளர்களிடம் அதிக வாடகை பெற்றுத் தருவதாகக் கூறி, வீட்டைப் பெற்று அதை பல்வேறு நபர்களுக்கு லீசுக்கு விட்டு ஐந்து கோடி ரூபாய் பெற்றுத் தலைமறைவானவரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வீட்டு உரிமையாளர்களிடம் மோசடி
வீட்டு உரிமையாளர்களிடம் மோசடி

By

Published : Aug 10, 2021, 3:04 PM IST

சென்னை:திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (29). இவர் சென்னை கிழக்குத் தாம்பரத்தில் சன ஷைன் பிராப்பர்டி டெவலப்பர்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் பிரகாஷ் சென்னை கீழ்க்கட்டளை, தாம்பரம், மேடவாக்கம்,சேலையூர் போன்ற இடங்களில் உள்ள வீட்டு உரிமையாளர்களை அணுகி வீட்டை அதிக வாடகைக்கு விட்டு நல்ல லாபம் பெற்றுத் தருவதாக கூறியுள்ளார்.

மேலும், உரிமையாளர்களிடம் பெற்ற வீடுகளை பிரகாஷ் தனது பெயருக்கு அக்ரிமெண்ட் போட்டுக்கொண்டு அந்த வீடுகளை லீசுக்கு விட்டு அதன் மூலம் ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் பணத்தைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாகியுள்ளார்.

இதனையடுத்து மோசடி செய்து தலைமறைவான பிரகாஷ் மீது கீழ்க்கட்டளையைச் சேர்ந்த அந்தோணி விமல்ராஜ் (37) உட்பட சுமார் 40 பேர் சென்னை காவல் ஆணையரிடம் புகாரளித்தனர். இந்த புகார் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த ஜூலை 31ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பிரகாஷ் மீது 89 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த பிரகாஷை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் திருச்செங்கோட்டில் கைது செய்தனர். பின் சென்னை அழைத்துவரப்பட்ட பிரகாஷை விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ஊரைவிட்டு ஒதுக்கிய கிராமம் - தற்கொலைக்கு முயன்ற குடும்பம்!

ABOUT THE AUTHOR

...view details