சென்னை:ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின், மாநில, மாவட்ட, தொழிற்சங்க நிர்வாகிகள் 120 பேர் அண்ணா தொழிற் சங்கப் பேரவையில் தங்களை இணைத்து கொண்டனர்.
இதனையடுத்து, கட்சியில் இணைந்த மாற்று கட்சியினருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. அவர்கள் அனைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர்களுடன் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் எம்.பி ஜெயவர்தன், ஆலங்குளம் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ உள்ளிட்ட அதிமுகவைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "திமுக அரசு தொழிலாளர்கள் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்கவில்லை. திமுக அரசு விளம்பர அரசியலை செய்து, தொழிலாளர்களை வஞ்சிக்கின்ற அரசாக இருக்கிறது. கொலை, கொள்ளை, கஞ்சா, போதை, கூட்டு பாலியலில் ஆகியவற்றில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது.