தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்துகளை இயக்க கோரிக்கை! - ETV Bharat

தமிழ்நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 350 ஆம்னி பேருந்துகளை இயக்கவில்லையெனில் அரசிடம் ஒப்படைப்பதைத் தவிர வேறு வழியில்லை என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்துகளை இயக்க கோரிக்கை
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்துகளை இயக்க கோரிக்கை

By

Published : Dec 8, 2022, 11:06 PM IST

சென்னை: கடந்த ஆண்டு முதல் இன்று வரை இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 350 ஆம்னி பேருந்துகளால் அரசுக்கு ரூ.21 கோடி, பேருந்து உரிமையாளர்களுக்கு பல கோடி ரூபாயும் இழப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலையிட்டு பிரச்னையினைத் தீர்க்க வேண்டும் என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் சங்கத் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு கொடுத்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'கடந்த 2020க்கு முன்பு தமிநாட்டில் தினசரி 4000 ஆம்னி பேருந்துகள் இயங்கின. நாள்தோறும் 1,25,000 பயணிகள் இந்த சேவையை பயன்படுத்தி வந்தனர்.

ஆனால், அதன்பின் கரோனா நோய்த்தொற்றால் ஆம்னி பேருந்து தொழில் பாதிப்படைந்து 1600 பேருந்துகள் மட்டுமே தற்பொழுது இயக்கி கொண்டிருக்கின்றன. கடந்த 26 மாதங்களாக ஆம்னி பேருந்து தொழிலில் உள்ள 570 உரிமையாளர்களில் பொருளாதார நெருக்கடியால் 15 உரிமையாளர்கள் மாரடைப்பு ஏற்பட்டும், 10 உரிமையாளர்கள் தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்துள்ளார்கள்.

இந்நிலையில் தொழில் சார்ந்த வாகன வாகன உரிமையாளர்கள் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் டயர் உற்பத்தியாளர்கள், பேருந்து கட்டுமான செய்பவர்கள், டிராவல் ஏஜெண்டுகள், மெக்கானிக், ஏசி மெக்கானிக், எலக்ட்ரிசன், பெயிண்டர், டயர்மேன், சலவை தொழிலாளர்கள், வாட்டார் வாஷ் செய்பவர்கள் என 12 லட்சம் நபர்களும் மற்றும் அவர்களின் குடும்பங்களும் வாழ்வாதாரம் கேள்விக் குறியான நிலையில் தவித்து வருகின்றனர்.

அரசு அனுமதிக்காவிட்டால் ஆம்னி பேருந்துகளை அரசிடம் ஒப்படைப்பதை தவிர வேறு வழியில்லை’ எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மாண்டஸ் புயல் - மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் சீற்றம்

ABOUT THE AUTHOR

...view details