தமிழ்நாடு

tamil nadu

நம்ப வைத்து பண மோசடி: நடவடிக்கை எடுக்கோரி பிரியாணி கடை உரிமையாளர் புகார்

By

Published : Oct 14, 2021, 7:15 PM IST

நம்ப வைத்து பண மோசடியில் ஈடுபட்டும், பொய் புகார் அளித்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் ஆர்.ஆர் பிரியாணி கடை உரிமையாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

gg
gg

சென்னை: தாம்பரத்தை சேர்ந்த ஜூலியஸ் இம்மானுவேல் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் சேலம் ஆர்.ஆர் பிரியாணி கடை உரிமையாளரான தமிழ் செல்வன் தனது வீட்டை அபகரித்து, தன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்துவதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அந்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் சேலம் ஆர்.ஆர் பிரியாணி கடை உரிமையாளரான தமிழ் செல்வன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்செல்வன் கூறியதாவது, " கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஜூலியஸ் இம்மானுவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு குடியிருந்து வருகிறேன்.

தான் குடியிருந்து வந்த வீட்டை விற்க இம்மானுவேல் முடிவு செய்தார். தானே அந்த வீட்டை வாங்கி கொள்வதாக கூறி 1.50 கோடி ரூபாய்க்கு பேசி முடித்தேன். அதன் பின் முன்தொகையாக 75 லட்ச ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்துகொண்டேன்.

தான் தரவேண்டிய மீதி தொகைக்காக கோயம்பேடு மற்றும் மதுரவாயல் சேலம் ஆர்.ஆர் பிரியாணி கடையை ஜூலியஸ் இம்மானுவேல் கவனித்து கொள்ள அனுமதி வழங்கினேன். அந்த கடைகளில் வரும் லாபத்தில் சரிபாதியாக பங்கு பிரித்து கொள்ளவும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

இதன் பின் அந்த வீட்டிற்கு ரூ. 40 லட்சம் செலவு செய்து புணரமைக்கும் பணியை மேற்கொண்டேன். சில மாதங்கள் கழித்து அந்த வீட்டை தனக்கு கிரயம் செய்து கொடுக்கும்படி இம்மானுவேலிடம் கேட்டபோது மறுப்பு தெரிவித்து அவர் வெளிநாட்டிற்கு தப்பியோடிவிட்டார்.

அதன் பின் 3 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை ஏமாற்றி தான் அபகரித்து கொண்டதாகவும், குண்டர்களை வைத்து மிரட்டுவதாகவும் இம்மானுவேல் தன் மீது பொய் புகார் அளித்துள்ளார்.

நம்ப வைத்து பண மோசடியில் ஈடுபட்ட ஜூலியஸ் இம்மானுவேல் மீது நடவடிக்கை எடுத்து, தனக்கு சேர வேண்டிய வீட்டை கிரயம் செய்து தரவேண்டும், இல்லையெனில் பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பிரியாணி பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி

ABOUT THE AUTHOR

...view details