சென்னையில் கரோனா பரவலைத் தடுக்க கிருமிநாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுவருகிறது. அண்ணா நகர், கோடம்பாக்கம் போன்ற மண்டலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இருப்பினும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதற்குச் சமமாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 93 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர்.
கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் விழுக்காடும் ஐந்தாக குறைந்துள்ளது. ஒரு மண்டத்தில் கூட சிகிச்சை பெற்று வருபவர்களில் எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக, அண்ணா நகரில் 903 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் அனைத்து மண்டலங்களிலும் குணமடைந்தவரின் விழுக்காடும் 90க்கு மேல் உள்ளது.
இதுவரையில் சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 901 பேர், கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 171 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மூன்றாயிரத்து 583 பேர் உயிரிழந்தனர்.
சென்னையில் மண்டல வாரியாக சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி,
அண்ணா நகர் - 903 பேர்
கோடம்பாக்கம் - 784 பேர்
தேனாம்பேட்டை - 703 பேர்
ராயபுரம் - 533 பேர்
திரு.வி.க. நகர் - 653 பேர்