தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முகக்கவசம் அணிவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி நடத்திய ஆய்வில், பொது இடங்களில் முகக்கவசம் அணிவோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சிறப்பு பேட்டியளித்த சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி தொடர்பான காணொலி
சிறப்பு பேட்டியளித்த சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி தொடர்பான காணொலி

By

Published : Aug 13, 2021, 10:11 PM IST

Updated : Aug 13, 2021, 10:54 PM IST

சென்னை: கரோனா தொற்று, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், பொது இடங்களில் கை கழுவுதல் போன்றவை குறித்து, சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது.

இதுகுறித்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, நமது ஈடிவி பாரத் ஊடகத்துக்கு சிறப்புப் பேட்டியளித்துள்ளார்.

அப்போது அவர் பேசுகையில், 'சமுதாய மருந்தியல் துறை தலைவர் அருண் முருகன் தலைமையில், ஜூலை 23 முதல் ஜூலை 31ஆம் தேதி வரை, சென்னையில் பொதுமக்கள் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை எவ்வாறு கடைபிடிக்கின்றனர் என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

சிறப்பு பேட்டியளித்த சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி தொடர்பான காணொலி

1045 இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வு

இந்த ஆய்வானது சென்னையில் 11 ஆயிரத்து 737 நபர்களிடம், ஆயிரத்து 45 இடங்களில் நடத்தப்பட்டது. அப்போது பொது இடங்களில் 5 விழுக்காடு முதல் அதிகபட்சமாக 38 விழுக்காடு மக்கள் மட்டுமே, முகக்கவசம் அணிவது தெரியவந்தது.

ரயில், மெட்ரோ ரயில் நிலையங்கள் போன்றவற்றில், 76 விழுக்காடு மக்கள் முகக்கவசம் அணிந்து வருகின்றனர்.

60 முதல் 70 விழுக்காடு மக்கள் மருத்துவமனைகள், ஆய்வகங்களில் முகக்கவசம் அணிகின்றனர். 49 விழுக்காடு மக்கள் மட்டுமே சமூக இடைவெளியை கடைபிடிக்கின்றனர். குறிப்பாக கோயில், சர்ச், மசூதி, திறந்தவெளி மார்க்கெட்டுகள் போன்றவற்றில் 5 முதல் 23 விழுக்காடு மக்கள் மட்டுமே சமூக இடைவெளியைக் கடைபிடிக்கின்றனர்.

அதே நேரத்தில் ஷாப்பிங் மால், ஐந்து நட்சத்திர விடுதிகள், மெட்ரோ ரயில் நிலையம் போன்றவற்றில், 67 முதல் 88 விழுக்காடு மக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கின்றனர். குறிப்பாக, கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அடிக்கடி கைகளை கழுவுவதற்கான வசதிகள், 54 விழுக்காடு இடங்களில் மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை முறைப்படுத்தல்

பெரும்பாலான இடங்களில் கை கழுவுவதற்கான எந்தவித வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை. மேலும் சிறிய, நடுத்தர உணவகங்களில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது.

பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை முறைப்படுத்துவதற்கான வசதிகள், 2 நட்சத்திர விடுதிகளில் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களிடம் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிப்பது குறித்த விழிப்புணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும்' என்றார்.

இதையும் படிங்க:கேரளா, மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கரோனா - வருகிறதா 3ஆம் அலை!

Last Updated : Aug 13, 2021, 10:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details