சென்னை:இது குறித்து ஈ.டி.வி பாரத்திற்கு அவர் அளித்த பிரத்யோக பேட்டியில், ”வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை தமிழ்நாடு, கேரளா, தெற்கு ஆந்திரா, தெற்கு கர்நாடகா, ராயல்சீமா உள்ளிட்ட ஐந்து பகுதிகளிலும் மழைப்பொழிவு இருக்கும்.
எனினும் இந்த பருவமழை தமிழ்நாட்டிற்கு முக்கியமான ஒன்றாகும். இந்த கால கட்டங்களில் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் 60 விழுக்காடு மழை இருக்கும். மீதமுள்ள உள் பகுதிகளில் 40 விழுக்காடு மழை இருக்கும்” என்றார்.
கேள்வி: இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கியுள்ளதா..?
பாலசந்திரன்: தாமதம் என்றே சொல்லலாம். ஏனெனில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டுஅக்டோபர் 23 ஆம் தேதிதான் விலகியது. தொடர்ந்து மற்றொரு புயல் உருவாகி வங்கதேச பகுதிக்கு சென்றது. இந்த இரண்டு காரணிகளும் தான் வடகிழக்கு பருவமழை தொடங்க தாமதப்படுத்தியுள்ளது.
’வடகிழக்கு பருவமழை இயல்பாக இருக்கும்’ - பாலச்சந்திரன் கேள்வி: கடந்த சில நாட்களாக வெக்கை அதிகமாக உள்ளதே...?
பாலசந்திரன்:கடந்த 10 ஆம் தேதியிலிருந்து 20 ஆம் தேதி வரை மழைப்பொழிவு அதிகமாக இருந்தது. மேலும், 20 ஆம் தேதிக்கு மேல் காற்றின் திசை மாறுபட்டு, காற்றில் ஈரப்பதம் குறைந்து மேக கூட்டம் குறைந்து வெக்கை சற்று அதிகமாக இருந்தது.
கேள்வி: வானிலையை துல்லியமாக கணிக்க இந்த ஆண்டு புதிய தொழில் நுட்பம் ஏதேனும் உள்ளதா..?
பாலசந்திரன்:வானிலையை பொறுத்தவரை நீர், நிலம் மற்றும் காற்று முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மூன்றுக்கும் இடையில் உள்ள சக்தி பெருமாற்றங்கள்தான் வானிலை கணிப்பு. மற்ற எல்லா நாடுகளிலும் எப்படி வானிலை கணிக்கப்படுகிறதோ, அப்படிதான் நாம் பல வழிகளில் தரவுகள் மூலம் கணிக்கிறோம்.
கேள்வி:வானிலை ஆய்வு மையத்திற்கும், அரசுக்கும் தகவல் பரிமாற்றங்கள் சரியாக உள்ளதா..?
பாலசந்திரன்:சந்தேகமே இல்லை. வானிலை ஆய்வு மையத்திற்கும், அரசுக்கும் நல்ல உறவு உள்ளது. நாங்கள் தொடர்ந்து வானிலை தொடர்பான செய்திகளை எந்த துறைகளுக்கு அனுப்ப வேண்டுமோ அந்த துறைகளுக்கு அனுப்பி வருகிறோம் முக்கிய அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம்" என்றார்.
கேள்வி: கடந்த ஆண்டுகளில் ஜனவரி மாதம் வரை வடகிழக்கு பருவமழை நீடித்துள்ளது. இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?
பாலசந்திரன் :கடந்த ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி வரை நீடித்தது. இது மிகப்பெரிய வானிலை மாற்றங்களால் நடக்கிறது. இதை அப்போது கணித்துத்தான் சொல்ல வேண்டும் என்ற அவர், சென்னையை பொறுத்தவரையிலும் வானிலையை கணித்துதான் சொல்ல முடியும்" என்றார்.
இதையும் படிங்க: மதுரை, ஹைதராபாத் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்