கரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமெடுத்து வரும் நிலையில் பல்வேறு வித புதிய கட்டுப்பாடுகளுடன் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. அதில் இரவு 10 மணி முதல் காலை 4 மணிவரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என அரசு அறிவித்தது. மேலும், கடற்கரை, பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை, பேருந்து போக்குவரத்து தடை, என பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்கு - night curfew
சென்னை: இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்ததன் காரணமாக சென்னையில் சாலை வெறிச்சோடி காணப்படுகின்றன.
sa
இந்த நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் 38 பெரிய மேம்பாலங்களும், 75 சிறிய மேம்பாலங்களும் மூடப்பட்டன. அண்ணாசாலை, 100 அடி சாலை, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, காமராஜர் சாலை உள்பட அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.தேவையின்றி சுற்றி திரிந்தவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. பெண்கள் உடன் வந்தவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.