நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக இதுவரை இரண்டுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல மாணவர்கள் இந்த விவகாரத்தில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆள்மாறாட்டத்திற்கு மூளையாக செயல்பட்ட இரண்டு இடைத் தரகர்களின் பெயர்கள் தற்போது வெளியாகியுள்ளது.
நீட் ஆள்மாறாட்டம் வழக்கு: தரகர்களின் பெயர்கள் வெளியீடு - The Issue of Brokers' Name
சென்னை: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் தொடர்புள்ள தரகர்கள் இரண்டு பேரின் பெயர்கள் வெளியாகியுள்ளது.

neet
வடமாநிலத்தைச் சேர்ந்த ரிஸ்வி மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேதாசலம் ஆகிய இருவரையும் சிபிசஐடி காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மேலும் நீட் ஆள்மாறாட்ட வழக்கு தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தேனி சிபிசிஐடி காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.