தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனமழை பெய்தால் எதிர்கொள்ள தேசியப் பேரிடர் மீட்புக்குழு தயார் -  அமைச்சர் கேகேஎஸ் எஸ்ஆர். ராமச்சந்திரன் - கன மழை

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும்போது கன மழை பெய்தால், அதை எதிர்கொள்ள தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர், மாநிலப் பேரிடர் மீட்புக்குழுவினர் தயாராக உள்ளனர் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

v
v

By

Published : Nov 9, 2021, 3:03 PM IST

சென்னை மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அதிக மழை பெய்யும்

அப்போது பேசிய அவர், 'கடந்த 24 மணி நேரத்தில் 38 மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. அதிகப்பட்சமாக 70.70 மி.மீ மழை பதிவாகியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டூர், பவானிசாகர், வைகை அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இன்று (நவம்பர் 9) இரவு அல்லது நாளைக்குள் (நவம்பர் 10) குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாக உருவாகும் போது அதிக மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். தேவையான பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். இன்றைய தினம் சென்னையில் மழை குறைவாக இருக்கும் என்பதால், மழை நீர் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளை மழை அதிமாக பெய்யும் பட்சத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பயிர் சேதம் கணக்கெடுப்பு

அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க ராணுவம், தேசியப் பேரிடர் மீட்புப் படை, ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 3 குழுக்கள், மதுரையில் 2, திருவள்ளூரில் 1, செங்கல்பட்டில் 1 குழு என தேசியப் பேரிட மீட்புக் குழுவினர் தயாராக உள்ளனர்.

மின்சாரத்தால் உயிரிழப்பு வரக்கூடாது என எச்சரிக்கையாக கையாள்கிறோம். மழை மற்றும் நிவாரண உதவிகளை கண்காணிக்க கூடுதல் ஐஏஎஸ் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பயிர் சேதம் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. பருவ மழை காலம் முடிந்ததும் நிவாரணம் வழங்கப்படும். சாய்வான நிலையில் உள்ள மரங்களின் கிளைகள் விரைந்து அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

கடலுக்குச் சென்றுள்ள மீனவர்கள் அனைவரும் இன்று கரை திரும்புவர். மீனவ கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுத்து, அங்கு வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்து விட்டு குறை கூறும் எடப்பாடி பழனிசாமி

அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பு

சென்னையில் 169 முகாம்களில் 16 முகாம்களில் பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கனமழை பெய்தால் எதிர்கொள்ள தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர், மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர் தயாராக உள்ளனர்.

பத்து ஆண்டுகால ஆட்சியில் முறையாக வாய்க்கால், கரைகள் அமைத்திருந்தால் மழைநீர் சூழ்ந்திருக்காது. மற்ற கட்சிகள் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பணிகள் குறித்து விவரமாக விளக்கிவிட்டு, அதனை திமுக அரசு தொடர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறினால் நியாயம் இருக்கும்.

ஆனால்,எவ்விதப் பணிகளும் செய்யாமல் பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்து விட்டு குறை கூறுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் தேவையில்லை" என்றார்.

இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழை: வருவாய் துறை அமைச்சர் ராமசந்திரன் செய்தியாளர் சந்திப்பு

ABOUT THE AUTHOR

...view details