சென்னை: ராயப்பேட்டையில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அனுமதி பெறாமல் இயங்கி வரும் விடுதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள விடுதியில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மாநில தலைவர் சரஸ்வதி ரங்கசாமி , உறுப்பினர்கள் சரண்யா ஜெயக்குமார் , துரைராஜ் , மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மார்ஸ் உள்ளிட்ட குழுவினர் 6ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது விடுதியில் உள்ள மாணவிகளிடம் அவர்களுக்கு செய்யப்பட்ட வசதிகள் மற்றும் குறைகள் குறித்து கேட்டு அறிந்தனர். அதுதொடர்பான அறிக்கை தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், அதனடிப்படையில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்கோ தானுங்கோ தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை இயக்குனருக்கு நடவடிக்கை உத்தவு கடிதம் ஒன்றை அனுப்பினார். .