நாமக்கல் ஜேடர்பாளையத்தில் உள்ள நெடுஞ்சாலைக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து பலர் வீடு மற்றும் கடைகளை கட்டியுள்ளனர். கிராம மக்களால் சாலையைப் பயன்படுத்த முடியவில்லை என்பதால், அந்த கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2008ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என 2010ஆம் ஆண்டு உத்தரவிட்டது. ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் ராஜேந்திரன் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், நெடுஞ்சாலைத்துறை மண்டல பொறியாளர் சந்திரசேகரன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டும் ஆஜராகாததால் ஆட்சியர் மற்றும் பொறியாளருக்கு எதிராக ஜாமீனில் விடுதலை செய்யக்கூடிய வாரண்டை பிறப்பித்து, அதை அமல்படுத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.