தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 1, 2022, 9:47 AM IST

Updated : Dec 1, 2022, 12:08 PM IST

ETV Bharat / state

சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி

தமிழ்நாட்டில் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சியில் 25 நாடுகளை பங்கேற்க செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், 12 நாடுகள் உறுதியளித்திருப்பதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

சென்னையில் ஜனவரியில் சர்வதேச புத்தக கண்காட்சி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
சென்னையில் ஜனவரியில் சர்வதேச புத்தக கண்காட்சி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி 2023 ஜனவரி 16,17,18 ஆகிய தேதிகளில் பன்னாட்டு புத்தக கண்காட்சி நடைபெறுகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இந்த புத்தக கண்காட்சியில் 40 நாடுகள் பங்கேற்க வைக்க திட்டமிட்டப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்று வந்தது. இந்தப் புத்தக கண்காட்சியில் ஏராளமானோர் நேரில் சென்று தங்களுக்கு தேவையான புத்தகங்களை விரும்பி பெற்று வந்தனர். புத்தக கண்காட்சிக்கு பார்வையிட வெளிநாட்டில் இருந்து தமிழகம் வருபவர்களும் வந்து கண்டு களித்து புத்தகங்களை வாங்கி செல்வது உண்டு.

சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சியில் பங்கேற்க பன்னாட்டு தூதர்களிடம் அழைப்பு விடுக்கப்பட்டது

ஆனால் வெளிநாட்டில் மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பலவற்றில் சிறந்த புத்தகங்கள் உள்ளன. இந்தப் புத்தகங்களை தமிழ்நாட்டில் உள்ளவர்களும் எளிதில் பெற வேண்டும் என்பதற்காக முதல் முறையாக சர்வதேச அளவில் புத்தக கண்காட்சி தமிழ்நாட்டில் நடத்தப்பட உள்ளது.

சென்னை பன்னாட்டு புத்தக கண்காட்சியில் பங்கேற்குமாறு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையிலான பள்ளி கல்வித்துறை உயர் அலுவலர்கள், சென்னை தனியார் விடுதியில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த தூதரக அதிகாரிகளைச் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

சென்னையில் ஜனவரியில் சர்வதேச புத்தக கண்காட்சி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

அப்பொழுது அவர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாட்டில் முதல்முறையாக பன்னாட்டு புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. புதிய ஆட்சி அமைந்த பின்னர் முதலமைச்சர் கல்வி மற்றும் மருத்துவத்தை இரு கண்களாக பார்க்கின்றார்.

கல்வியை மேம்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றாக பன்னாட்டு புத்தகக் கண்காட்சி ஜனவரி 16,17,18 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர் சங்கம் சார்பில் இரண்டு வாரம் புத்தக கண்காட்சி நடைபெறும். அதில் குறிப்பாக பன்னாட்டு புத்தக கண்காட்சி ஜனவரி 16, 17, 18 ஆகிய மூன்று நாட்களில் நடைபெறுகிறது.

சென்னையில் ஜனவரியில் சர்வதேச புத்தக கண்காட்சி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

இந்த புத்தக கண்காட்சியில் 25 நாடுகளை இருந்து பங்கேற்க வைக்க திட்டமிட்டுள்ளோம். ஏற்கனவே 12 நாடுகள் கலந்து கொள்ளவாதாக உறுதி அளித்து உள்ளனர். பன்னாட்டு புத்தக கண்காட்சியில் கலந்து கொள்ளும் நாடுகள் அவர்கள் நாட்டின் பெருமைகள் மற்றும் சிறந்த புத்தகங்களை கண்காட்சியில் வைக்கலாம்.

மேலும் புத்தகங்களை படிப்பதற்கான படிப்புரிமை குறித்தும்,, தமிழ் இலக்கிய புத்தகங்கள் போன்றவற்றை மொழிபெயர்ப்பதற்கும் உதவி தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்த ஆண்டில் பன்னாட்டு புத்தக கண்காட்சியில் சுமார் 40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளதாகவும் வரும் ஆண்டில் 100 நாடுகளைச் சார்ந்தவர்களை பன்னாட்டு புத்தக கண்காட்சியில் பங்கேற்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

சென்னையில் ஜனவரியில் சர்வதேச புத்தக கண்காட்சி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

சென்னையில் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 169 நாடுகள் கலந்து கொண்டன. அதுபோல் சர்வதேச புத்தக கண்காட்சியிலும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், தொடக்க கல்வி இயக்குநர் அறிவொளி, நூலக இயக்குநர் இளம்பகவத், மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:அரசுப்பள்ளி கலை விழாவில் பறை இசைத்து அசத்திய பள்ளி மாணவிகள்

Last Updated : Dec 1, 2022, 12:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details