தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதலிக்காக டாட்டூ குத்தியவர் கொள்ளையனாக மாறி காவல் துறையில் சிக்கினார் - டாட்டூ

சென்னை: டாட்டூ குத்துவதில் பல சாதனைகளை புரிந்த இளைஞர் செயின் பறிப்பு கொள்ளையனாக மாறி காவல் துறையில் சிக்கியிருக்கிறார்.

fasd
dafs

By

Published : Apr 20, 2021, 1:35 AM IST

சென்னை வில்லிவாக்கம் மற்றும் ராஜமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த மாதம் தொடர்ச்சியாக செல்ஃபோன் மற்றும் செயின் பறிப்பு அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாக குற்றவாளிகளை விரைந்து பிடிக்க இணை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக அண்ணா நகர் துணை ஆணையர் ஜவஹர் தலைமையில் கொண்ட தனிப்படை போலீசார் ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் ஒரு புகைப்படத்தை காட்டினார்.

அந்த புகைப்படத்தை வைத்து விசாரணை செய்ததில் திருவள்ளூர் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சங்கர் (25), மனோஜ் (25), ஆகிய இருவரையும் கைது செய்து வில்லிவாக்கம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல் வெளியாகியது.

அதன்படி, மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் பவர் வசந்த் (35). இவர் சமீப காலமாக வடபழனியில் டாட்டூ குத்தும் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். அதேபோல் இவர் டாட்டூ குத்துவதில் பல்வேறு சாதனைகளையும் புரிந்து வந்துள்ளார். இவர் ஒரு பெண்ணுடன் காதலில் இருந்திருக்கிறார்.

கைது செய்யப்பட்டவர்

கரோனா என்பதால் டாட்டூ குத்துவதில் போதுமான வருமானம் கிடைக்காததால் பவர் வசந்த் கடந்த ஒரு மாதமாக தன்னுடைய காதலிக்கு பணம் செலவு செய்ய செல்ஃபோன் மற்றும் செயின் பறிப்பில் ஈடுபட்டுவந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை காவல் துறையினர் மீஞ்சூரில் பதுங்கியிருந்த பவர் வசந்த்தை கைது செய்து வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்

கைது செய்யப்பட்ட பவர் வசந்த் மீது வண்ணாரப்பேட்டை காவல் நிலைத்தில் செயின் பறிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் சங்கர் என்பவர் மீது மீஞ்சூர் காவல் நிலைத்தில் செல்ஃபோன் பறிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொள்ளையடித்த நகைகளை தனது காதலியிடம் கொடுத்ததால் அவரையும் போலீசார் கைது செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details