தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழிலாளியை கத்தியால் வெட்டி தப்பமுயன்றவர் போலீஸில் ஒப்படைப்பு! - Nerkunram Periyar Vegetable Market

சென்னை: நெற்குன்றம் பெரியார் காய்க்கறி சந்தையில் தொழிலாளியை வெட்டி விட்டு தப்பமுயன்றவரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

நெற்குன்றம் பெரியார் காய்க்கறி சந்தை  The man who stabbed the worker and escaped was handed over to the police  தொழிலாளியை கத்தியால் வெட்டி தப்பமுயன்றவர் போலீஸில் ஒப்படைப்பு  சென்னை குற்றச் செய்திகள்  Nerkunram Periyar Vegetable Market  Chennai Crime News
The man who stabbed the worker and escaped was handed over to the police

By

Published : Jan 28, 2021, 7:26 PM IST

சென்னை நெற்குன்றம் பகுதியில் பெரியார் காய்க்கறி சந்தை அமைந்துள்ளது. இந்தக் காய்கறி சந்தையில், உள்ள ஒரு கடையில் முருகேசன் என்பவர் 5 வருடமாக வேலை செய்து வந்துள்ளார். நேற்று (ஜன.27) இரவு முருகேசன் வேலை செய்யும் கடையில் உறங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு பேர் கையில் வைத்திருந்த கத்தியைக் கொண்டு முருகேசன் தலையில் பலமாக தாக்கியுள்ளனர். இதில், வலி தாங்கமுடியாத முருகேசன் சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அங்கு சென்ற பக்கத்து கடையில் வேலை செய்யும் முருகன் என்பவரையும் தாக்கிவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

அப்போது, அருகிலிருந்தவர்கள் ஒருவரை மட்டும் பிடித்துள்ளனர். இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் பிடிப்பட்டவரிடம் விசாரணை நடத்தினர்.

தொழிலாளியை கத்தியால் வெட்டும் சிசிடிவி காட்சிகள்

இதனிடையே, கடையின் உரிமையாளர் செல்வராஜ் காயமடைந்த இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விசாரணையில், முருகேசனை தாக்கியது ராஜேஷ், அலெக்சாண்டர் என்பது தெரியவந்தது. பின்னர் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய அலெக்சாண்டரை தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:தனியார் பள்ளி நிர்வாகி கொலை முயற்சி: கூலிப்படை அட்டகாசம்

ABOUT THE AUTHOR

...view details