தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. கிளீனர் போக்சோவில் கைது...! - சிறுமிக்கு பாலியல் தொல்லை

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி வேன் கிளீனர் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவர் போக்சோவில் கைது...!
3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவர் போக்சோவில் கைது...!

By

Published : Oct 1, 2022, 11:14 AM IST

சென்னை: திருவல்லிக்கேணியைச் சேர்ந்த மூன்றரை வயது சிறுமி ஒருவர் ராயப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார். சிறுமி தினமும் வேன் மூலமாக பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி பள்ளி விட்டு வீட்டிற்கு வந்த சிறுமி தொடர்ந்து அழுது கொண்டிருந்தார்.

இதனால் சிறுமியின் பெற்றோர் உடனடியாக சிறுமியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற போது, சிறுமிக்கு யாரோ பாலியல் தொல்லை கொடுத்திருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர்.

பின்னர் சிறுமியை அழைத்து பள்ளி ஆசிரியர்கள் உட்பட அனைவரது புகைப்படத்தையும் காட்டி விசாரணை நடத்திய போது, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது சிறுமியை அழைத்து செல்லும் வேன் உதவியாளர் சத்யராஜ் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சத்யராஜை காவல்துறையினர் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: வீட்டில் தண்ணீர் வராததால் ஆத்திரம்...மண்வெட்டியால் மனைவி, மகளை கொலை செய்தவர் கைது

ABOUT THE AUTHOR

...view details