சென்னை:சென்னை, பழைய மகாபலிபுர சாலையில் வசிக்கும் கனகம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது கணவர் 20 வருடங்களுக்கு முன்பு இறந்துள்ளார். அதன் பிறகு முருகன் என்ற நபருடன் வாழ்ந்து வந்துள்ளார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். அதில் ஒருவர், சமீபத்தில் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். இரண்டாவது மகன் தனியாக தங்கி வேலை பார்த்து வருகிறார்.
இதனைத்தொடர்ந்து கடந்த ஐந்து வருடங்களாக கண்ணகி நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் (வயது 45) என்பவருடன், கனகம் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் இருவரும் வீட்டில் ஒன்றாக அமர்ந்து, மது அருந்தி உள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்றிரவு கனகத்தின் மகன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கனகம் பிறப்புறுப்பில் பாட்டிலால் குத்தப்பட்டு, தீ வைத்து கொலை செய்யப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து, அருகில் உள்ள கண்ணகி நகர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். பின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜெயக்குமார் மற்றும் பாண்டியனை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்ததில், ஜெயக்குமார் தான் கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு - 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி - முன்னாள் திருநங்கை மாணவர் திட்டம் அம்பலம்!